காந்தியும் ‘கற்பழிப்பும்’
காந்தியின் நோக்கில் ஒரு மனித உயிர் அதுவே பிற உதவி இல்லாமல் வாழத்தேவையான
கைத்தொழிலை கற்றிருக்கவேண்டும். இல்லையேல் அது முழுமையான ஆளுமை அல்ல. ஆகவே
பெண்களுக்குக் கைத்தொழில் என்பதை காந்தி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்
காந்தி அவரது வாயால் வன்முறையை நியாயப்படுத்திச் சொன்ன முக்கியமான
தருணம் பாலியல்வன்முறை பற்றி பேசும்போதுதான். வல்லுறவில் ஈடுபடுபவனை
அந்தப்பெண் தன் பல்லாலும் நகத்தாலும் கொல்லவேண்டும் என்று சொல்கிறார்.
அதற்காக அப்பெண் என்ன செய்தாலும் அது தகுமே என்று வாதிடுகிறார்.
உண்மையில் அது வல்லுறவு அல்ல, வீட்டைவிட்டு வெளியே வராதே என்ற
அறிவிப்புதான். காந்தி வீட்டை விட்டு வெளியே கொண்டுவந்த இந்தியப்பெண்ணை
நோக்கி இன்றைய சுரணையற்ற அரசியலதிகாரம் சொல்லும் வரியாகவே அதை
பொருள்கொள்ளவேண்டும். இந்த போராட்டம் அந்த வரிக்கு எதிரானது. நடமாட்ட
உரிமையை இந்த அரசும் சமூகமும் உறுதிசெய்கிறதா இல்லையா என்ற ஆதாரமான
கேள்விதான் அது.
அப்படியென்றால் ஏன் பாலியல் வன்முறையை கொலைத்தண்டனைக்கான குற்றமாக
காந்தி எண்ணினார்? ஏனென்றால் அது பெண்ணை பொதுவெளியில் இருந்து திரும்ப
இருண்ட சமையலறைக்கு விரட்டுகிறது என்பதனால்தான். இருபதாம் நூற்றாண்டின்
அரசியலால் அவள் அடைந்த அனைத்தையும் அவளிடமிருந்து பறிக்கிறது என்பதனால்தான்
No comments:
Post a Comment